திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகார பூர்வ வருகை நிகழ்ச்சி
திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக Rtn.R.ராஜா கோவிந்தசாமி கலந்து கொண்டு மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் , பல செயல் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தி கொண்டு வரலாம் போன்ற
பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து ஆளுநரை அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆளுநரின் மாவட்ட செயலாளர் Rtn.S.J.சாந்தாராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn.D.பவன்ஜி பட்டேல், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் Rtn.M. செல்வகனி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.இதில் மேற்கு ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் Rtn.
S. புருஷோத்தமன், மூத்த நிர்வாகி Rtn. G.S.சுந்தர்ராஜன் மற்றும்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன்
நன்றி கூறினார்.



