கடையநல்லூர் 18
கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பரப்பளவில் பெரிய நகரமாகும்.
இந்த நகரத்தின் வடக்கு நுழைவாயிலான குமந்தபுரம் முதல் தெற்கே மங்களாபுரம் வரையிலான கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்வரை உள்ள சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகள் கட்டிடங்களின் முகப்பு தூண்கள் விளம்பர பதாகைகள் அனைத்தையும் அகற்ற கடையநல்லூர் நகரத்தின் சமூக அமைப்புகள் பலமுறை தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளித்தும் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் மெத்தனம் காட்டியதோடு காலதாமதமும்செய்து வந்தது . ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை தயாரானால் காவல்துறையும், நகர சபையும் ஒத்துழைப்பு கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டேயிருந்தன காவல்துறை தயாரானால் நெடுஞ்சாலை துறையில் ஆள் பற்றாக்குறை என அவ்வப்போது அந்த நிர்வாகமும் மெத்தப்போக்கை காட்டி வந்தது இந்த நிலையில் ஒரு சில சமூக சேவக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கலையில் வழக்கு தொடர போவதாக சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளர் பணியில் பணியாளர்கள் இல்லாவிடினும் நகர சபை அதிகாரிகளை இணைத்துக் கொண்டு இந்த ஆக்கிரமிப்பு களப்பணிகளில் ஈடுபடுத்தி காவல் துறையோடு அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது அந்த வகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் யாவும் வரும் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 மணி அளவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்(208/744) தெரிவித்துள்ளது .
இதுகுறித்து கடையநல்லூர் சரக தேசிய நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் திருமலை வாசன் கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் நகர பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் உள்ள ஆக்கிரப்புகளை வரும் 19ஆம் தேதி அகற்ற உள்ள நிலையில் தங்கள் நிர்வாகம் முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இவ்வாறு அந்த கடிதத்தில் இளநிலை பொறியாளர் திருமலைவாசன் குறிப்பிட்டுள்ளார்…