நீலகிரி மாவட்டம்
ஊட்டி தமிழகம் மாளிகையில் வடகிழக்கு பருவமழை தடுப்பு குறித்து செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். தலைமையில்
ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்
அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆவின் மேலாண் இயக்குனர் வினித், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர். மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து முன்னேற்பாடு பணிகளை தீவிர படுத்தவும் மின்சாரத்துறை தீயணைப்பு துறை வனத்துறை மருத்துவத்துறை பேரிடர் மீட்பு குழுவினர். நெடுஞ்சாலைத்துறை ஆகியவைகள் தயாராக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வைத்திருக்கவும் நெடுஞ்சாலை துறை மூலம் போக்குவரத்துகளை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடவும் மருத்துவத்துறை பாதுகாப்புகளை தீவிர படுத்தவும் முகாம்கள் அமைக்கவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 42 மண்டல குலுக்கள் ஏற்படுத்தப்பட்டு 456 முகாம்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டதோடு பொதுமக்களும் மழை பாதிப்பு குறித்து எந்த நேரமும் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.