தருமபுரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய புகையிலை இல்லா இளைஞர் பிரச்சார பேரணி 2.0 நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இலக்கியம்பட்டி வரை சென்று முடிவடைந்தது. இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி படி கல்லூரியின் மாணவ, மாணவிகள் சென்றனர். கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.



