நாகர்கோவில் ஆக 29
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்தும், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அவதிக்குள்ளாகும் தொழிலாளர் நிலை குறித்தும் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கினர்.
நாகர்கோவில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அண்ணா போக்குவரத்து பிரிவு நாகர்கோவில் மண்டல செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, அண்ணா போக்குவரத்து பிரிவு நாகர்கோவில் மண்டல தலைவர் சந்தனராஜ், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு இணைச் செயலாளர் வீரேசன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு பொருளாளர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், நாகர்கோவில் தெற்கு பகுதிக கழகச் செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன், மேல்புறம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கடையல் மணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஹெப்சிபாய், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், நெல்லை மண்டல பொருளாளர் வேல் பாண்டியன், பைபாஸ் பணிமனை செயலாளர் செந்தில்வேல், கே.என்.றி. டெப்போ செயலாளார் பண்டாரம், அரசு விரைவு போக்குவரத்து பிரிவு செயலாளர் ஜேக்கப், 1-வது டிப்போ இணைச் செயலாளர் குமரேசன், முன்னாள் மாவட்ட அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் முருகேசன் மற்றும் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒட்டுநர்கள், நடத்துனர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.