வேலூர்=01
வேலூர் மாவட்டம், ,தி-ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, வேலூர். நியூ லைஃப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) | குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம், மனநல காப்பகம்
இணைந்து நடத்திய
இலவச கண் பரிசோதனை முகாம் குடியாத்தம் கொண்டசமுத்திரம். பஞ்சாயத்து பிச்சனூர் சக்தி நகர்
நியூ லைஃப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) வளாகத்தில், நடைபெற்றது .இதில்
சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
என்.குமார், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பிரம்மாஸ். ஆர்.பி.
செந்தில், புதிய நீதி கட்சி நகர செயலாளர் எஸ்.ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர். முகாமில்
கண் பார்வை குறைபாடுகள்
கண்களில் சதை வளர்ச்சி,
கிட்டபார்வை, மற்றும் தூரப்பார்வை,
கண்ணீல் நீர் அழுத்தம் கண்புரை
ஒற்றை தலைவலி , ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.