திருப்பத்தூர்: மார்ச்:10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சி புலிகுட்டை கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி துவக்கி வைத்தார்.
ஆதியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இனிப்பு மற்றும் உணவு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் புலி குட்டை ஊராட்சி கிளை செயலாளர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் புலிகுட்டை பகுதியினைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் விஜயா, தசரதன், ஜெயவேல் மற்றும் அந்த பகுதியில் சேர்ந்த திமுக கழக முன்னோடிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் சங்கர் நன்றியுரை வழங்கினார்.