கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து வந்தது இதனை தமிழக அரசு நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தது.
இதன் அடிப்படையில் கடந்த மாதத்தில் இருந்து கன்னியாகுமரி நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதன் முதல் ஆணையராக ஈழவேந்தன் நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று மாலை கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக செயல் அலுவலராக இருந்து வந்த ரமாதேவி புதிய ஆணையரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.