நாகர்கோவில் ஜூன் 25
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் சிவசுடலை சுவாமி சிலையை அடித்து உடைத்து சேதபடுத்தி மதப்பிரச்சனையை தூண்டலில் ஈடுபட்ட இஸ்லாமிய மதத்தை சார்ந்த அக்பர்பாதுஷா என்பவரை கைது செய்ய கூறியும், இதுசம்மந்தமாக களியக்காவிளை காவல்நிலையத்தில் இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராஜன் புகார் அளித்ததன் பேரில் அவர்மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவுசெய்துயுள்ளனர். ஆனால் இதுவரையிலும் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. மேலும் இதுபோன்ற மதப்பிரச்சனையை தூண்டும் வகையிலான சம்பவங்களை தடுக்க குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறது.”கைதுசெய்யாத பட்சத்தில் இந்துதமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக இந்து தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜன் மற்றும் மாநில செயலாளர் ஈசான சிவம் ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.



