சிவகங்கை:டிச: 15
சிவகங்கை மாவட்டம் இடையமேலூரை அடுத்துள்ளது குமாரபட்டி. இந்த ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி லட்சுமி (70 ) என்பவர் கணவனால் கைவிடப்பட்டவர் இவர் தனது மகன் காந்தி ( 45) என்பவரை கூலி வேலை செய்து காப்பாற்றியுள்ளதாக கூறுகிறார். காந்தியும் இப்போது கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. காந்தி என்பவர் தனது மனைவி அன்னமயில் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் , தனது தாய் லட்சுமி ஆகியோரோடு கூட்டுக் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வந்த நிலையில் தனது ஓட்டுவீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென வெளி பக்கமாக சாய்ந்து விட்டது. இதே சுவர் வீட்டின் உள்ப்பகுதியில் சாய்ந்து இருந்தால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் வீட்டை இழந்து நிற்கும் லட்சுமியின் குடும்பத்தினர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லட்சுமி நமது செய்தியாளரிடம் பேசும் போது. பள்ளியில் படித்து வரும் எனது இரண்டு பேத்திகள் மற்றும் எங்கள் குடும்பத்தினர் இப்போது இந்த இடிந்த வீட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குடியிருந்து வருகிறோம் எனவே அரசு எங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்து உதவி செய்தால் பிழைத்துக் கொள்வோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி இந்த குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.