தருமபுரி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர் வாகன ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி துவக்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி வருகின்ற 31-ஆம் தேதி வரை பல்வேறு விழிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்கும் போட்டு வாகனங்களை இயக்கும் போது மக்கள் அனைவரும் மிதமான வேகத்துடன் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்கிட பாடுபட வேண்டும். 4 சக்கர வாகனங்கள் இயக்கும் பொழுது சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து, சாலை குறியீடுகளையும், விதிகளையும் மதித்தால் விபத்துக்களை தடுத்திட முடியும். எனவே சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். இந்த ஊர்வலம் செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி பைபாஸ் ரோடு வழியாக தருமபுரி ராமாக்கால் ஏரிகரை அருகே முடிவடைந்தது. இந்த
நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணி தர், பாலசுப்பிரமணியம், வெங்கிடுசாமி , குலோத்துக்கண், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் தன்னாலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.