கன்னியாகுமரி மே 31
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அவரின் வருகைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக
100% ஒப்புகை சீட்டுகளை எண்ணி பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற பாதகை ஏந்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போராட்டம் நடத்தியதற்காக நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
எதிர்கட்சிகள் இக்கோரிக்கையை உறுதிபட வலியுறுத்தி பாஜக வின் இ வி எம் தில்லுமுல்லுகளை தடுத்து நேர்மையான தேர்தல் முடிவுகள் அறிவிப்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும்.
பாஜக இ வி எம் மோசடி செய்யவில்லை என்றால் 100% ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி எந்த வித சந்தேகத்துக்கும் இடமளிக்காமல் நேர்மையான தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டியது தானே? என கேட்டு கையில் பதாகையுடன் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வந்த நந்தினி கன்னியாகுமரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்