நாகர்கோவில் ஜன 24
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பைப்புவிளை பகுதியில் உள்ள சாலை சீரமைக்க மதிப்பீடு தயார் நிலையில் உள்ளதால் உடனே சாலை பணியை மேற்கொள்ள கோரி நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.முத்துகுமார் தலைமையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வார்டு பொறுப்பாளர் ரெனோ திலக் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.
இது சம்பந்தமாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி சாலைப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருப்பதாக கடிதமும் பெறப்பட்டிருந்தது. எனவே அப்பணியை உடனடியாக செய்து தரக் கோரி நேற்று மீண்டும் மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் மார்ச் மாதத்தில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள் தனுஷ் குமார், ஜான், சொக்கலிங்கம், ஷாஜி, நாகராஜன், ஆறுமுகம், விஜிலன்,ரஞ்சித், ஜெனித் மற்றும்
நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.