By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்
கனஂனியாகுமரிமாவட்டம்

பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்

Last updated: October 2, 2024 12:45 pm
October 2, 2024
93 Views
Share
SHARE

தக்கலை, அக் – 2 

 

 

 

 திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் குமாரகோவில் முருகன் மற்றும் பத்மனாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக

 

திருவனந்தபுரம் கொண்டு செல்வது வழக்கம். பின்னர் அங்கு நவராத்திரி விழா பூஜை பங்கேற்ற பின்பு சாமி சிலைகளை மீண்டும் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வழக்கம்.

 

       இதையொட்டி நேற்று முன்தினம்  சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அன்று  மாலை பத்மனாபபுரம் நீலகண்ட சாமி கோவிலில் வந்தது.  நேற்று காலை 7.30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்டவர்மா உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

 

      கேரள அறநிலையத்துறை அமைச்சர்  வாசவன் முன்னிலையில் தொல்லியல் துறை அமைச்சர்  கடனப்பள்ளி ராமசந்திரன் உடைவாளை எடுத்து குமரி மாவட்ட திருகோயில்கள் இணை ஆணையர் பழனிகுமாரிடம் உடைவாளை ஒப்படைத்தார். அவர் அரண்மனை ஊழியரிடம் ஒப்படைத்தார். 

 

       தொடந்து முன்னுதித்த நங்கையம்மன் பல்லக்கிலும் வேளிமலை முருகன் வெள்ளி குதிரை வாகனத்திலும் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் யானையிலும் எழுந்தருளி பூஜைகள் செய்யப்பட்டு பிடி அரிசி காணிக்கையுடன் புறப்பட்டது. 

 

 

 

    ஊர்வலம்  தக்கலை, கேரளபுரம், திருவிதாங்கோடு, அழகிய மண்டபம், முளகுமூடு, மார்தாண்டம் வழியாக  இரவு குழித்துறை மகாதேவர் கோவில் சென்றது. 

 

      அங்கிருந்து சாமி சிலைகள் மீண்டும் இன்று (2 -ம் தேதி)  காலையில் ஊர்வலமாக புறப்பட்டு களியக்காவிளை சென்றடையும். அங்கு கேரளா போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சாமி சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் .

 

       பத்மனாபபுரம் அரண்மனையில் நடந்த உடைவாள் மாற்றும் நிகழ்வில் கன்னியாகுமரி கலெக்டர் அழகு மீனா,  பாறசாலை எம்.எல்.ஏ ஹரீந்திரன், கோவளம் எம்.எல்.ஏ வின்சென்ட்,  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் , தாசில்தார் சஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது!
குலசேகரம் போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
சோப்பு போடும் வகையில் பட்ஜெட் போட்டு ஆட்சி
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது

November 3, 2025
34 Views
தஞ்சாவூர் அரண்மனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி மஞ்சள் கோட்டை தாண்டி அதிவேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகள்
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி அணி முதலிடம்
கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account