நாகர்கோவில், டிசம்பர் 16 –
நாகர்கோவில் மின்வாரிய செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை (17ம் தேதி) புதன்கிழமை நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடி வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குண வீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலணி, சவேரியார் கோவில் ஜங்ஷன், ராமவர்மபுரம், சரலூர் இந்துக் கல்லூரி, வேதநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
எனவே மின்னோட்டம் இருக்காது என்று கருதி பொதுமக்கள் மின்னூட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம். பராமரிப்பு பணியின் போது மின்பாதைக்கு இடையூறாக நிற்கும் மரக்கிளைகளை அகற்றவும் பழு பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணியின் போதும் மின்வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



