நாகர்கோவில், நவம்பர் 14 –
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை கட்டுப்படுத்த எஸ்.பி ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பலர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டும் வருகின்றனர். குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நாகர்கோவில் மதுவிலக்கு போலீசார் சந்தேகத்தின் பெயரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்களின் உடமைகளை சோதனையிட்டபோது அவர்களிடம் போதை மாத்திரை, போதை ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாத்திரை, ஊசியை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அனைவரும் நாகர்கோவில் நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு போதை மாத்திரை, ஊசி எங்கிருந்து கிடைத்தது என விசாரணை நட நடத்தினர்.


