சுசீந்திரம், அக். 24 –
நாகர்கோவில் அருகே உள்ள சி.டி.எம் புரத்தை சேர்ந்தவர் ஜெயவிக்ரமன் (42). இவர் நாகர்கோவில் மாநகராட்சியின் 49-வது வார்டு தி.மு.க மாமன்ற உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று கவுன்சிலர் ஜெயவிக்ரமனின் மனைவியும் அவரது மகனும் வீட்டில் தனியாக இருந்து கொண்டிருந்தபோது தெங்கம்புதூர் அருகே உள்ள மேலக்காட்டுவிளையை சேர்ந்த கவிபிரபாகரன் (42). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கவிபிரபாகரன் சம்பவத்தன்று அரிவாளுடன் ஜெயவிக்ரமன் வீட்டிற்கு வந்து கெட்ட வார்த்தைகள் பேசியும், அரிவாளை காட்டி கவுன்சிலர் ஜெயவிக்ரமனின் மனைவியையும், மகனையும் குடும்பத்தோடு அழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயவிக்கிரமன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் கவிபிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்ற கவிபிரபாகரனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


