குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட வடக்கு கோணம் சர்ச் முன் கால்வாயில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ₹ 10 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணியினை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், மேயர் மகேஷ் இணைந்து அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்கள்.உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகர காங்கிரஸ் தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். நவீன் குமார், 32 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுஜி பிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



