கருங்கல், பிப்-13
குமரி மாவட்டம் கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (42). இவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஜெயலட்சுமிக்கு சொந்தமான சொகுசு காரை வழு தலம்பள்ளத்தில் உள்ள அவர் சகோதரர் சரவணன் தற்போது பயன்படுத்து வருகிறார்.
சரவணன் வெளிநாட்டிற்கு வேலை செல்வதற்காக காரை விற்பனை செய்வதற்காக ஓஎல்எக்ஸ் என்னும் சமூகவலை விற்பனை தளத்தில் பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த ஒருவர் போன் செய்து, நேற்று மாலை காரை பார்ப்பதற்காக இருவர் அவர் வீட்டுக்கு வந்துள்ளனர்.
காரை பார்த்தவர்கள் காரை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறி காரை எடுத்துச் சென்றவர்கள் பின்னர் திரும்பி வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.