கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” (Career Guidance) தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் துவக்கி வைத்து கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று தற்போது கிருஷ்ணகிரி தோட்டக்கலை கல்லுாரியில் பயின்று வரும் மாணவி குப்பம்மாள் அவர்களை பாராட்டி புத்தகம் பரிசாக வழங்கினார். உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .ரமேஷ்குமார், தாட்கோ பொது மேலாளர் .வேல்முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ், கல்வி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் .இளையராஜா, மாற்று ஊடக மைய பேச்சாளர் .ஸ்டாலின் ராஜா மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளனர்.



