சென்னை, அக்டோபர் – 02,
டாடா நிறுவனம் தயாரிப்பில் பேக்கேஜ் செய்யப்பட்ட காஃபி பிராண்டான “டாடா காஃபி கிராண்ட்” சர்வதேச காஃபி தினத்தில் இசை
வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
“தி ஷிக் ஷிக் ஷிக் பாடு ” என்ற என்ற பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பின்னணி பாடகி தீ இப்பாடலை பாடியிருக்கிறார்.
பெங்களூரூ லோவ் லிண்டாஸ் விளம்பர நிறுவனம் இந்த புத்தம் புதிய காஃபி பாடலை அழகியலுடன் படம் பிடித்திருக்கிறது.
டாடா நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் பேக்கேஜ்டு பானங்கள் பிரிவுத் தலைவர் புனித் தாஸ் “தி ஷிக் ஷிக் ஷிக் பாடு'” காஃபி பாடலை வெளியிட்டு பேசுகையில், “இந்த தமிழ் மணக்கும் காஃபி பாடலை தமிழ்நாட்டு காஃபி பிரியர்களுக்கு சமர்பணம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். டாடா காஃபி மற்றும் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ உடனான இந்த கூட்டு முயற்சியானது, ஒவ்வொரு நாளையும் உற்சாகமளிக்கும் ‘காபி தினமாக’ உணரும் வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு புதுமையான தாக்கத்தை உருவாக்கும் என்பது நிச்சயம்.மேலும்
தமிழ்நாட்டின் காஃபி கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இப்பாடல் பிரதிபலிக்கும் என்றார்.