தருமபுரியில் பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை குறித்து இரங்கல் தெரிவிக்க தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தருமபுரிக்கு வருகை புரிந்தார். இறந்து போன முகமது ஆசிப் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தபின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.இதில் கொலை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையும், உயிரிழந்த குடும்பத்தாருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணத் தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும். என மனுவில்தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது ஆசிப் என்ற இளைஞர் உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வெறி பிடித்த கும்பலா ல்வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆசிப்ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பின்னணியில் தான் இந்த படுகொலை நடந்துள்ளது.ஆசிப் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தப் பெண்ணை சார்ந்தவர்கள் வசதியான குடும்பத்தை சார்ந்தவர்கள் .ஜாதி மதத்தை தாண்டி இது ஒரு ஆணவ படுகொலையாக நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட
ஆசிப்பின் வீட்டிற்கும் அவர்பணிபுரிந்த உணவகத்திற்கும் நேரில் சென்று விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியளரிடழும், மாவட்ட எஸ்பியிடழும் நேரில் சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இந்த கொலையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.இந்த படுகொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும். ஆசிப்பை படுகொலை செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளோம். போதைக்கு எதிராக தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் இதனை வேகப்படுத்த வேண்டும்.போதை பொருள் தொடர்புள்ளவர்களை கடுமையான சட்ட திட்டங்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் கொலைகள் அதிகமா கநடப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் அனைத்தியந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் அதிக கொலைகள் நடந்துள்ளது. இதனை தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லாஹ் பத்திரிகை யாளர்கள்சந்திப்பில் தெரிவித்தார்.