களியக்காவிளை டிச- 9
களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட பனவிளை-முரடகுளம் கான்கிரீட் சாலையை வடிகால் வசதியுடன் சீரமைக்க வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் தலைவர் என்.எம்.பிரேம்ராஜ் முதல்வரின் தனிப் பிரிவுக்கு விடுத்து கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட பனவிளை-முரடகுளம் கான்கிரீட் சாலை போடப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் இந்த சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.. இந்த சாலை ஆங்காங்கே உடைந்து கற்களும் பெயர்ந்து சிறு சிறு பள்ளங்களுடன் உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் சரிவரப் பயணிக்க முடியாமல் விழுந்து எழுப்பி செல்கின்றனர்..
ஏற்ற இறக்கமான இந்த கான்கிரீட் சாலை வடிகால் வசதியின்றி போடப்பட்டுள்ளதால் மழையின் போதும், மழை விட்டு பல நாட்கள் கடந்த பின்பும் தண்ணீர் வடிந்த நிலை இன்றும் நீடிக்கிறது. பல ஆண்டுகளாக இந்நிலை தொடர்கிறது.
வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் இதனால் பெரிதும் சிரமப் படுகிறார்கள். இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்துக்கும் உள்ளாகின்றனர்.
மட்டுமன்றி நடந்து செல்வோரும் வழுக்கி விழுவதோடு நிலை தடுமாறவும் செய்கின்றனர்.பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினந்தோறும் இந்த மோசமான அபாயகரமான சாலையில் மிகவும் கவனமாகப் பயணிக்கும் அவல நிலையைக் களைய அரசு முன்வர வேண்டும்.
ஆகவே, பனவிளை-முரடகுளம் கான்கிரீட் சாலையை மீண்டும் புதிதாக வடிகால் வசதியுடன் செப்பனிட்டு சீரமைக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.