தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சங்கரன்கோவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி சங்கரன் கோவில் நகர் பகுதியில் ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் ஏற்பாட்டில் கக்கன் நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு களப் பணியாளர்களை கொண்டு மாஸ் ஒர்க் டெங்கு கொசு ஒழிப்பு களப்பணி நடைபெற்றது களப்பணியில் நகராட்சி டெங்கு விழிப்புணர்வு பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளில் உள்ள குடிநீர் கலன்களை ஆய்வு செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



