காஞ்சிபுரம் மே 21
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் மீனாட்சி மருத்து கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியின் நிறுவனர் வேந்தர் ஏ.என். ராதாகிருஷ்ணன் 86 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமுதாய மருத்துவத்துறை மற்றும் ஐஎஸ்ஓ அன்னை பாரத் அபியான் என் எஸ் எஸ் இணைந்து நடத்தும் தொற்றா மருத்துவ முகாம் வாலாஜாபாத் ஒன்றியம் காரை கிராமத்தில் குளியாத்தம்மன் ஆலயம் அருகே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் கே.வி.ராஜசேகர் தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கே.பூபதி, துணை முதல்வர் டாக்டர் வி.ஈஸ்வரி, சமுதாய மருத்துவர் டாக்டர் சங்கர் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
அதன் பின்னர் காரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இந்நிகழ்வில் யுபிஏ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஆர்.பாண்டியன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.டி.கோபிநாத், ஐஎஸ்ஓ ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.எஸ்.சரவணகுமார், துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் மணி,வார்டு உறுப்பினர்கள் உட்பட முதுநிலை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.