ஆரல்வாய்மொழி ஏப் 14
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி:-
சித்திரை மகளே வருக
சிந்தையில் இன்பம் தருக
முத்திரை பதிக்க வருக
முழு நிலவின் குளிர்ச்சியை தருக
மகிழ்ச்சியை என்றும் தருக
மகத்துவம் படைக்க வருக
துன்பங்கள் துவண்டு போக
இன்பங்கள் பெருக வருக
கண்ட துன்பங்கள் கரைந்து போகட்டும்
வெற்றி எங்கும் கிடைக்கட்டும்
கல்வியால் வாழ்வு சிறக்கட்டும்
கருணையால் மனிதநேயம் பெருகட்டும்
இனியவை என்றும் நடக்கட்டும்
முயற்சிகள் என்றும் தொடரட்டும்
வாய்மை என்றும் மிளிரட்டும்
பொய்மை என்றும் அழியட்டும்
எதிர்காலம் என்றும் நமக்கே
வெற்றி கிடைக்கும் என்பது நம்கணக்கே
உழைப்போம், உயர்வோம்
புதுமைகள் படைப்போம்
வாழ்க தமிழ் மொழி, வளர்க தமிழ் இனம்.
அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.