அரியலூர், ஆக:13
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.75.72 இலட்சம் மதிப்பிலான 08 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் களப்பணியில் ஈடுபடும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75.72 இலட்சம் மதிப்பிலான 08 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் கவிதா, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.