சென்னை, ஆகஸ்ட்- 05, சென்னை பல்லவன் இல்லம் மாநகர் போக்குவரத்து மத்திய பரணிமனையில் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.66.15 கோடி மதிப்பில் 100 புதுப்பிக்கப்பட்ட தாழ்தள பேருந்துகளை இயக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சென்னை மாநகர மேயர் பிரியாராஜன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், போக்குவரத்து கூடுதல் செயலாளார் க.பணீந்தர் ரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் ஜான் வர்கீஸ், தொ.மு.ச பேரவை பொருளாளர் கி. நடராஜன் மற்றும் துறை அலுவலர்கள் கள் பலர் கலந்து கொண்டனர்
மேலும் ரூ.66.15 கோடி மதிப்பிலான 58 பி.எஸ் -VI தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண பி.எஸ் -VI பேருந்துகள் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகள்இயக்கத்தை தொடங்கி வைத்தார்கள்