வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற 22 ஆண்டு கால கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாமல் இருப்பதாக நெசவாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களின் வாரிசுகளைப் பட்டதாரிகளாக்கி, மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும், தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கும் உயர்த்திய பள்ளிக்கு விமோசனம் எப்போது வரும் என்றே அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் ஏங்குகின்றனர். குடியாத்தம் நகரின் இதயப் பகுதியான பிச்சனூரில் நெசவாளர்களே பெரும்பான்மையினர். வீதிகள்தோறும் பாவுகள் நிரம்பியிருக்க, குடும்பத்தோடு பாவு நெய்து வந்தனர். பிள்ளைகளைக் கூட பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். 1972ஆம் ஆண்டில் பிச்சனூரில் கங்காதரசாமி தெருவில் நகராட்சித் தொடக்கப் பள்ளியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது. இதற்கான இடமும், கட்டடத்தையும் தெருவாசிகளே ஏற்படுத்தி நகராட்சிக்கும், கல்வித் துறைக்கும் ஒப்படைப்பு செய்து பள்ளியை அமைத்தனர். இந்தப் பள்ளி பின்னர் 2000-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. . நெசவாளர்களின் வாரிசுகளைப் படிக்க வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இந்தப் பள்ளியை கோயிலாகவே பிச்சனூர் பகுதி வாசிகள் கருதுகின்றனர். இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று 22 ஆண்டுகளாக பிச்சனூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். ஏனெனில், எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும் எனில், தனியார் பள்ளிகளை நாடும் சூழல் உள்ளது. . இந்தச் சூழலில் 2003-ஆம் ஆண்டு முதல் பள்ளியை உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். . இதுவரையில் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது வேதனையாக இருக்கிறது பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் . விரைவில் பள்ளி மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் கல்வி கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



