கோயம்புத்தூர், ஏப்ரல் 21
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விசைத்தறி மற்றும் ஜவுளி துறையை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில், கோவை – திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே ஆலோசனைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வுக்கு தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமையிலாக முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர்களும் கலந்து கொண்டு வழிகாட்டுதல் வழங்கினர். மேலும் பல உயர் அலுவலர்களும் இதில் பங்கேற்றனர்.