சங்கரன் கோவிலில் தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 9 ,ம் தேதி முதல் 19/9/2024 வரை தினமும் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராஜா அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது முகாமில் புற்றுநோய் மருத்துவம் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை மூளை மற்றும் நரம்பு மண்டல நோய்களுக்கான சிகிச்சை உள்பட அனைத்து பிரிவு சிகிச்சைகளுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உதவிகள் பெறுவதற்குஆதார் அட்டை குடும்ப அட்டை கிராம நிர்வாக அதிகாரியிடம் பெறப்பட்ட வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் கொண்டு வந்து பொதுமக்கள் தங்கள் பெயரை பதிவு செய்து அடையாள அட்டை பெற்று மருத்துவம் பார்த்துக் கொள் ளவும் மருத்துவ உதவிகள் பெறுவதற்கும் ஏதுவாக இம் முகாம் நகரில் 30 வார்டுகள் உள்ளன ஒரு நாளைக்கு மூன்று வார்டுகள் பொதுமக்கள் அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பத்து நாளைக்குள் 30 வார்டு பொது மக்களும் தங்கள் பெயரினை பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என திமுக தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ தனது அறிக்கையில் கூறியுள்ளார்



