நாகர்கோவில் ஜூலை 15
கன்னியாகுமரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” கிட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கி, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதாகும். இத்திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையின் சார்பில் அரசு சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதி, பால்குளம் மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, அகஸ்தீஸ்வரம் ஆகிய விடுதிகளிலிருந்து சுமார் 80 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, விவேகானந்தா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் வைத்து 09.07.2024 முதல் 12.07.2024 வரை 4 நாள் தற்காப்பு பயிற்சியானது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன்(பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றம்) துவக்கி வைக்கப்பட்டு மாணவிகளுக்கான சீருடையும் வழங்கப்பட்டது. தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு நிகழ்சியானது 12.07.2024 அன்று மாவட்ட கூடுதல் காவல் காண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. செல்வி. காளீஸ்வரி. வருவாய் கோட்டாட்சியர், நாகர்கோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மகேஷ்குமார், கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், விஜயமீனா, மாவட்ட சமூகநல அலுவலர், ராஜன், செயலாளர் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காவல் துறை, மாவட்ட சமூகநலத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மாணவிகள் தாங்கள் கற்ற தற்காப்பு கலையை அதிகாரிகள் முன்னிலையில் செய்து காட்டினர். மாணவிகளை பயிற்றுவித்த பயிற்றுநர்கள் அந்நாளில் சிறப்பிக்கப்பட்டனர். தங்களை பாதுகாத்துக்கொள்ள இத்தற்காப்பு பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று மாணவிகளால் பின்னூட்டமாக கூறப்பட்டது. பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட உறுதிமொழியும் அதிகாரிகள் மற்றும் மாணவிகளால் எடுக்கப்பட்டது. இவ்விழாவின் இறுதி
நிகழ்வாக மாணவிகளுக்கு சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவின் ஒரு
பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.