திருப்பத்தூர், மே 12
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் அரளிக்கோட்டையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் தாய் தந்தையரின் நினைவாக பி. அழ. கருத்தான் கோனார் கரு. கருப்பாயி அம்மாள் நினைவு கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த அறக்கட்டளையானது வருடாவருடம் பலதரப்பு மாணவர்களை அடையாளம்கண்டு அவர்களின் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை முறையான ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளித்து வருகின்றது.
அந்த வகையில் இந்தக் கல்வி தொண்டு அறக்கட்டளை சார்பில் தற்காப்புக்கலை பயிற்சி பள்ளியில் நான்காம் ஆண்டின் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
தற்காப்புக் கலையான சிலம்புபட்டறை மற்றும் சீடர் மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன்
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சண்முகநாதன் அம்பலம், மாவட்ட விவசாய அணி எஸ். எஸ். அருணாச்சலம், மாவட்ட மாணவரணி கதிர். இராஜ்குமார், மாவட்ட அயலக அணி சீமான் சுப்பையா , மாவட்ட ஐடி விங் நிர்வாகிகள் காளிமுத்து, வாடிவாசல் முத்துவேல் செல்வம் , ஒய்க்கா சோமு , பிள்ளையார்பட்டி சதீஷ்குமார், ஊராட்சி மேனாள் தலைவர்கள் தேவாரம்பூர் இராமநாதன், காளிதாஸ் , உள்ளிட்ட மொத்தம் 74 கிராமங்களைச் சேர்ந்த 396 மாணவர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.