கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கெங்கபிராம்பட்டியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேடியப்பன் சுவாமி, ஸ்ரீ முனியப்பன் சுவாமி, ஸ்ரீ விநாயகர் சுவாமி, ஸ்ரீ தேசத்து மாரியம்மன் சுவாமி மற்றும் நவகிரஹ சாமிகளுக்கு நூதன ஆலய புனரோதாரண அதிர்ஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது, இவ்விழா காலை 6 மணிக்கு மேல் மங்கள இசை விநாயகர் வழிபாடு ஸங்கல்பம், புண்யாஹம், தேவதா ரஷாபந்தன், இரண்டாம் கால பூஜை, உயிரூட்டுதல், பூர்ணாஹதி, தீபாராதனை, யாத்ராதானம், கலச புறப்பாடு, கோபுர மூலாலய கும்பாபிஷேகம் அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, அருள் பிரசாதம், ஆசீர்வாதம், ஐயர் மரியாதை,ஊர் மரியாதை கோபூஜை
நடைபெற்றது. திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.