சென்னை ஏப்ரல் 22
சென்னை, விநாயகபுரம், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 50 ஆண்டுகள் பழமையான பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோவிலாக இருந்த இத்திருத்தலம் கடந்த 2013-ல் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலாக புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்துஞாயிற்றுக்கிழமை, விநாயகபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவிலை புதுப்பித்து புதியதாக கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார், புதியதாக சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் திருக்கோவில் சிதிலமடைந்த பகுதிகளை சரி செய்து, புதிய வர்ணம் தீட்டி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினைத்தொடர்ந்து மகா ஆசீர்வாதம் சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் விநியோகம், வேத பிரபந்தம் ஆகிய நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியாக, மாலை 4.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரகலாதவரதர் திருக்கல்யாண உற்சவமும், இரவு 8.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி பிரகலாதவரதர் சேஷ வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய தலைவர் என்.மன்னார், செயலாளர் வி.பன்னீர்செல்வம், பொருளாளர் எஸ்.சொக்கலிங்கம், துணைத் தலைவர் பி.குப்பன், துணைச் செயலாளர் எம்.குமார், துணைப் பொருளாளர் ஏ.வடிவேல் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் இ.ராமன், ஆர்.அனந்த நாராயணன், பி.தேவன், ஆர்.சுந்தரம், ஜெ.ரகு, ஏ.கதிர்வேல், வி.சரவணன், பி.ரமேஷ், பி.சந்திரசேகர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.