வேலூர் 10
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட கங்காதரன் கானாற்றங்கரையில். அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை, மகாலட்சுமி ஹோமம் ,மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், யாத்திரா தானம், கலசங்கள் புறப்பாடு, இதனைத் தொடர்ந்து விமான கோபுரங்களுக்கு கலச அபிஷேகம், கும்பாபிஷேகமும், மஹாதீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் செஞ்சி, கிருஷ்ணாபுரம், வெங்கடாபுரம், ஆயர்குளம், குந்தூர், தேவிகாபுரம் ,கோட்டைமேட்டூர் , கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்கள், இளைஞர்கள், பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.