மதுரை ஜனவரி 26,
மதுரையில் மெட்ரோ திட்டம் விரைவில் தொடக்கம்..!!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகள் மதுரை ரயில்வே சந்திப்பு அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக இடங்களை நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ மூன்று ஆண்டுகளில் முடியும். உயர்த்தப்பட்ட பாலத்திற்கான பணிகள் முடிய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மெட்ரோ திட்டத்தின் ரூட், மதுரையில் மெட்ரோ அமைக்க பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.
சென்னையில் உள்ளதை போன்று மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027 ல் மெட்ரோ பணிகள் மதுரையில் முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels ) செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும். இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.
திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும். மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்கு வாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும். மதுரை மெட்ரோவை தமிழக அரசு தனது பிரதான திட்டங்களில் ஒன்றாக மாற்றி உள்ளது. இதற்கான அதிக முக்கியத்துவத்தை கொடுத்து திட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி மாதமே இதற்காக நிலம் எடுக்க உள்ளனர். சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் மதுரை, கோயம்புத்தூருக்கு புதிதாக மெட்ரோ டிபிஆர் தயாரிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட டிபிஆர் ரிப்போர்ட் பல்வேறு தவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இதனால் கிடப்பில் கிடந்த திட்டம் தற்போது மீண்டும் புதிய டிபிஆர் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கலாம்.