கிருஷ்ணகிரி,மே.29-
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க, மாவட்ட இளைஞரணி தலைவர் இளையப்பன், சத்தியசீலன்,சங்கர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைமை சார்பாக மத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் எம்.சக்தி தலைமையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. சிவம்பட்டி களர்பதி, மத்தூர், அந்தேரிப்பட்டி, நாகம்பட்டி, மத்தூர்பதி, கவுண்டனூர், கண்ணன்டஹள்ளி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் அருள்குமார்,கதிரவன், பிரேம்குமார், அருண்குமார், மின்னல், சதீஷ், கதிரவன், ஓம்சக்தி, திருப்பதி, இளவரசன், சூர்யா, விக்னேஷ், கபிலன், கார்த்திக், செல்வம், பிரபு, கார்த்திக், விநாயக், ரவி, சாரதி,சக்தியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 500 பேருக்கு மதிய உணவு வழங்கினர்.



