ஈரோடு ஜூன் 1
லோகமாதா ராணி அகில்யா பாய் கோல்கர் 300 வது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் முன்னாள் எம் பி கார் வேந்தன் சேவா பாரதி தேவி பிரசாத் ஆகியோர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு லோக மாதா ராணி அகில்யா பாய் கோல்கரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கிருத்திகா சிவக்குமார் மாவட்ட பொது செயலாளர் புனிதம் அய்யப்பன் மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணவேணி பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்



