கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்தியன் வங்கி சார்பாக, 2024 -2025 ஆம் ஆண்டிற்கு வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள்
தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி ஒவ்வொரு வருடமும் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்டத்தை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டிற்கு ரூ.21988.30 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2024-25 ஆண்டிற்கான கடன் திட்டத்தில், நபார்டு வங்கி தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தை பின்பற்றி கடன் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பிரிவுகளுக்கு விவசாயம், தொழில் முதலான ரூ.21988.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தின் முக்கிய துறையான விவசாயத்திற்கு ரூ.14794.37 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.5496.67 கோடி கடன் தர உத்தேசிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடனாக ரூ.30.34 கோடியும், வீட்டுக்கடனுக்கு ரூ.113.50 கோடியும் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கியாளர்கள் கடன் திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும். அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களை வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் விரைவில் செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் .பெரியசாமி, இந்தியன்
வங்கி மண்டல துணை பொது மேலாளர் .பிரேந்திர குமார், இந்திய ரிசர்வ் வங்கியின்
முன்னோடி மாவட்ட அலுவலர் .தர்மராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்
.சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்ன பாலமுருகன்,
நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் .ரமேஷ், தாட்கோ மேலாளர்
.கே.எஸ்.வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை
.ராஜாமோகன் மற்றும் மாவட்ட அனைத்து வங்கி மேலாளர்கள், அரசு துறை
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.