இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
தஞ்சாவூர். நவ.14
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க தஞ்சை கோட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைப்பெற்றது.
கோட்ட பொதுச்செயலாளர் சங்கர் வரவேற்றார்.தஞ்சை கோட்ட துணைத் தலைவர் முனிசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் தாமோதரன், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ ஐ ஐ டி ஏ கோட்டப் பொதுச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் விளக்கவுரையாற்றி பேசியதாவது, எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கி அதனை கபளிகரம் செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. உங்களது போராட்டம்
தடுத்து நிறுத்தும் வகையில் அமைய வேண்டும்.தொடர்ந்து போராடுங்கள் என பேசினார்
தமிழ் மாநில தலைவர் பூவலிங்கம் நிறைவுறையாற்றி
னார்.
முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச காப்புத் தொகையை ரூ.1 லட்சமாக குறைக்க வேண்டும். பாலிசி எடுப்பதற்கான அதிக பட்ச நுழைவு வயதை அனைத்து திட்டங்களுக்கும் 65 ஆக உயர்த்த வேண்டும்.பாலிசிதாரரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளுக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்த வேண்டும். முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பாக கொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன், மாநில செயலாளர்கள் குமார், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சை கோட்ட துணை செயலாளர் மாதவ வேலன் நன்றி கூறினார்.