சிவகங்கை மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவினையொட்டி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி வைத்து. ஆட்சியர் வளாகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு மேலங்கிகளையும் (ஓவர் கோட்) வழங்கப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ். செல்வசுரபி, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



