கன்னியாகுமரி ஆக 23
கன்னியாகுமரி சன்னதி தெருவில் தியாக சவுந்தரி அம்மன் என்ற பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவது சம்பந்தமாக கேரள நம்பூதிரிகளை வரவழைத்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது மூலஸ்தானமாக அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான தியாக சவுந்தரி என்ற பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து பழமையான 24-வது சக்தி பீடமாக திகழும் இந்த கோவிலில் கும்பாபிஷேக நடத்த இந்து சமய அறநிலையத்துறையின் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.



