குளச்சல் அக் 29
குமரி மாவட்டம் குளச்சல் பழைய கமாராஜர் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைப்பெற்று தற்போது முடிவு பெறும் தருவாயிலுள்ளது. ஆனால் இன்னும் பேருந்து நிலையத்திற்கான நுழைவு வாயில் அமைக்கப்படாமல் இருக்கிறது எப்பொழுது பணிகள் முழுமை பெற்று திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்காலிக பேருந்து நிலையத்தால் சாலையோரங்களில் பேருந்துகளின் அணிவகுப்பால் போக்குவரத்தும் சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது .எனவே
புதிய பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில் அமைத்து முழுமையாக பணிகள் முடிவடைந்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.