திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கணபதிஹோமம்,லட்சுமிஹோமம்,
கோ பூஜை மங்கல இசை முழங்க இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜையுடன் நடைபெற்று மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களுடன் கோவிலில் வலம் வந்து விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்பொழுது வானத்தில் 12 கருடர்கள் வட்டமிட்டது இதனை கண்ட பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர் ஸ்ரீ மந்தையம்மன் கன்னி மூலவிநாயகர் ஸ்ரீபாலமுருகன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்ரீவராகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு அதன் பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது
அதன் பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டதுஇந்த கோவில் கும்பாபிஷேக விழாவினை கொந்தகை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.