வேலூர்_18
அதிமுக பிரமுகரும் ஜே.கே. லைவ் உரிமையாளருமான எம்.ஜெகதீசன் தாங்கினார். சேனல் புத்தூர் தலைமை
நிகழ்ச்சியில் வேலூர் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட அவைத் தலைவர் சேட்டு, மற்றும் கமக பகுதிசெயலாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் கிளைச் செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி நிருபர்கள் சந்திப்பில்
ஒற்றை தலைமை வேண்டுமென்று கோரிக்கையை நாங்கள் தான் முன் வைத்தோம் அப்பொழுதுதான் ஜெயலலிதா இருந்து போல் செயல்பட முடியும் என்று கூறினோம் ஆனால் ஓபிஎஸ் உள்பட சிலர் அவர்களாகவே தான் வெளியே போனார்கள் நாங்கள் யாரையும் போக சொல்லவில்லை நீங்கள் குறிப்பிட்டது போல் இவர்கள் எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள சொல்கிறீர்கள் வெளியில் இருப்பவர்கள் தான் பாஜகவுக்கு சாதகமாக அதிமுக கட்சி எதிராக செயல்பட்டு வருகிறார்கள் கூட்டணியில் நின்று தோல்வியுற்ற பிறகு ஒருங்கிணைக்க வேண்டும் என்று கருத்தை முன் வைக்கிறார்கள்.
இப்போது அவர்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று தேவைப்பட்டாலும் உங்கள் அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று எடப்பாடி தலைமையில் அதிமுகவுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று சசிகலா ஓபிஎஸ் பிரிந்து போன அனைவரும் கட்சியில் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதை சொல்ல வேண்டும்.
இப்போது கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அறிக்கையை விடுபவர்கள் எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒருங்கிணைக்க தயார இருக்கிறோம் என அறிக்கை விட வேண்டும் எடப்பாடி தலைமையில் நாங்கள் அனைவரும் செயல்பட தயாராக வருகிறோம்என அவர்கள் சொல்ல வேண்டும் ஆனால் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார்கள் அப்படி என்றால் அவர்களிடம் தலைமை கொடுக்க சொல்கிறார்களா என எங்களுக்கு புரியவில்லை இவ்வாறு நிருபர்களிடம் பேசினார்