கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஒக்கலிகர் (காப்பிலிய) கவுடர் சமுதாயம் சார்பாக வருடம் தோறும் விவசாயம் செழிக்க மும்மாரி மழை பெற வேண்டி கன்னிமார் கருப்பசாமி சிலைகள் ஐந்து விவசாய நிலத்தில் வைத்து நேர்த்திக்கடன் செய்து வருவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் கம்பம் வடக்கு தெரு பொதுமக்கள் சார்பாக இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவானது கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்மப்புளி (கொப்புனுசை) என்ற இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கறி விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் காமுகுல ஒக்கலிகர் காப்பிலிய (காப்பு ) சங்கம் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.



