கன்னியாகுமரி, டிச. 5 –
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அஞ்சுகிராமம் பேரூர் தவெக சார்பில் அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் பேரூர் தவெக செயலாளர் ஜாண் வின்ஸ்டன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எட்வின் பேரூர் துணைச் செயலாளர்கள் ஜோதி, சுந்தர்ராஜா, பொருளாளர் நரேஷ் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தவெக மாவட்ட செயலாளர் மாதவன் கலந்து கொண்டு நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார் இளைஞரணி மாரியப்பன் தவெக நிர்வாகிகள் சபரீஷ், மகேஷ் ராஜா, விஷால், ஆகாஷ், நோபிள், விஜய், அருள், ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



