அஞ்சுகிராமம், டிச. 6 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி, காணிமடம் பகுதியில் கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் ஓட்டுநர்களிடம் பள்ளி–கல்லூரி பகுதிகளில் மெதுவாக ஓட்டுதல், செல்போன் பயன்படுத்தாமல் இயக்குதல், அதிகபாரம் ஏற்றாதிருத்தல், அனுமதி இல்லாமல் வாகன மாற்றம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வால் கடந்த ஆண்டை விட கன்னியாகுமரியில் வாகன விபத்து உயிரிழப்பு 50% குறைந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். 70-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, ‘விபத்தில்லா குமரி’ முயற்சியின் ஒரு பகுதியாக தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.



