களியக்காவிளை, டிச. 17 –
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரிக்ககம் கடகம் பள்ளி பகுதியை சார்ந்தவர் விஜயன் மகன் சைஜு என்ற ஷிபு (44). இவர் ஊர் சுற்றி வெட்டியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று களியக்காவிளை அருகே பாழடைந்த ஐயா நாராயண சுவாமி கோயில் வராண்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார். சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



